திருமண முறைகள்

வேதங்கள் குறிப்பிடும் திருமண முறைகள் எட்டு வகைப்படும் அவை,


பிரமம் - கன்னியை அணிகலன்கள் பூட்டிப் பிரமச்சாரி ஒருவனுக்குத் தானமாகத் தருவது.

பிரசாபத்தியம் - கோத்திரம் அறிந்து பெண் கேட்பவனுக்குப் பெற்றோர் பெண்ணை மணம் முடித்துத் தருவது.

ஆரிடம் - ஒன்றோ, இரண்டோ, பசுவோ, எருதோ வாங்கிக்கொண்டு பெண் தருவது.

தெய்வம் - வேள்வி ஆசிரியன் ஒருவனுக்கு வேள்வித் தீ முன்னர் பெண்ணைத் தருவது.

காந்திருவம் - ஒத்த இருவர் தாமே கூடும் கூட்டம்.

அசுரம் - 'வில்லேற்றியவனுக்கு வழங்குவேன்' என்பது போல் ஒன்று சொல்லி அது செய்தார்க்குப் பெண் தருவது.

இராக்கதம் - ஆண் பெண்ணைத் தூக்கிச் சென்று திருமணம் கொள்வது.

பைசாசம் - கள்ளுண்ட பெண்ணிடமோ, உறங்கும் பெண்ணிடமோ ஆண்மகள் உடலுறவு கொள்வது. 


என்பன.

சாஸ்திரத்தை பழித்தால் வரும் கேடுகள்- புலிப்பாணி

பாடியே சாஸ்திரத்தைப் பழித்த பேர்கள் பண்பில்லா கூன் குருடு ஊமையாகி வாடியே சப்பாணி நொண்டி யாகி வளமிலாச் செவிடாகி ரூபங்கெட்டு சாடியே யவர்களெல்லாம் நாசமாகிச் சாவார்கள் பெண்டுபிள்ளை யெல்லாஞ்சேர்த்து கூடியே வியாதியிலே யமிழ்ந்து மாய்ந்து கொடிதான நரகத்திலழுந்து வாரே. (பாடல்:184) - புலிப்பாணி ஜாலத்திரட்டு பொருள்: உலகத்தில் சாஸ்த்திரங்களை பழித்தவர்கள் கூன் விழுந்தவர்களாகவும், பார்வை அற்றவர்களாகவும், வாய் பேசமுடியாமலும், கை,கால்கள் ஊனமுற்ற நிலையிலும்,காது கேட்காமல் செவிடனாகவும், கேவலமான உருவத்துடன் பிறந்து துன்பப்பட்டு நாசமாகி சாவார்கள். இப்பாவம் இவர்களை மட்டும் பாதிக்காமல் இவரின் மனைவி, குழந்தைகளையும் சேர்த்து பாதிக்கும். மேலும் தீராத பல வியாதிகளைத்தந்து கொடிய நரகத்தில் அவர்களை தள்ளிவிடும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.