12 ராசிகளுக்கான பரிகார தலங்கள்

தெய்வ வழிபாடு:
  முருகப் பெருமான் வழிபாடு சிறப்பான பலனைத் தரும். அறுபடை வீடுகள், வயலூர், குன்றக்குடி, விராலிமலை, திருத்துறைப் பூண்டி, வடபழனி, எட்டுக்குடி போன்ற முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருத்தலங்களை வழிபட்டு வரலாம். கார்த்திகை விரதம், கந்தசஷ்டி  விரதம் மேற்கொள்ளலாம்.  வைகாசி விசாகத் தன்று முருகனை தரிசனம் செய்யலாம். முருகனைப் போன்றே வீரியமுள்ள வீரபுத்திரர், கருப்பசாமி, மாடசாமி, வனக்காளி, பத்ரகாளி போன்ற  தெய்வங்களை வழிபட்டு வருவதும்; நன்மை தரும்.

 

  தெய்வ வழிபாடு:

  அம்மன் வழிபாடு சிறப்பு தரும். சக்தி ஸ்தலங்கள் என்று சிறப்பாக அழைக்கப்படும் புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்திவர வேண்டும். மதுரை மீனாட்சி காஞ்சி.காமாட்சி, காசி விசாலாட்சி போன்ற முதன்மை ஆதிக்கம் பெற்ற சக்தி ஸ்தலங்களும், திருநெல்வேலி காந்திமதி குற்றாலம், மடவார் குழலி, கன்னியாகுமரி, பகவதி இராமேஸ்வரம் பர்வதவர்த்தினி, திரூத்திர கோசமங்கை மங்கள் நாயகி, திருஆனைக் காவல் அகிலாண்டேஸ்வரி, மைசூர்  சாமுண்டேஸ்வரி சிருங்கேரி சாராதாம்பாள், தாய் மூகாம்பிகை போன்ற ஆதி சக்தியை தரிசனம் செய்ய வேண்டும். 

 

  தெய்வ வழிபாடு:
  விஷ்ணு வழிபாடு சிறப்பு தரும். திருப்பதி வெங்கடசலபதி தரிசனமும், தென் திருப்பதி திருவண்ணாமலை, திருமோகூர் காளமேகப் பெருமாள், நவதிருப்பதிகள்,மதுரை அழகர் கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர், ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயனர், திருபுல்லானி அனந்த சயன பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் சூடிக் கொடுத்த ஆண்டாள் போன்ற எம்பெருமானின் திருத்தலங்கள் சென்று வழிபட்டு வரலாம். வாய்ப்பு கிடைத்தால் விட்டலாபுரம் பாண்டுரங்கன், குருவாயூரப்பன்,பிரயாகை சென்று எம்பெருமான் தரிசனம் கண்டு வரலாம்.

 

தெய்வ வழிபாடு:
"அம்மன் தனியாக நின்று ஆட்சி செய்யும் ஆலய வழிபாடு சிறப்பு தரும். அம்மனை வெள்ளி கிழமையில் வழிபடுதல் மிகவும் சிறப்பு.

 

  தெய்வ வழிபாடு: 

  சிவபெருமான் வீற்றிருக்கும் திருத்தல வழிபாடு நன்மை தரும். பஞ்சபூத ஸ்தலங்களான திருவண்ணாமலை, திருவாரூர், திருக்காளத்தி, திருஆனைக்காவல், சிதம்பரம், போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள வேண்டும். பிர தோசம், சிவராத்திரி போன்ற் தினங்களில் விரதம் இருந்து சிவதரிசனம் காண வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் காசி, பத்ரிநாத் போன்ற வடமாநில சிவ ஸ்தலங்களுக்கு சென்று வரலாம். வாய்ப்பு இல்லாதவர்கள்  காசிக்கு சமமான சிவகாசி மற்றும் தென் காசி விஸ்வநாத பெருமானை தரிசனம் செய்யலாம்.   

 

  தெய்வ வழிபாடு:
குருபகவான் வழிபாடு முறைப்படி வியாழன் தோறும் செய்து வர வேண்டும். அத்துடன் சங்கரன் கோவில், (நெல்லை மாவட்டம்) சென்று சங்கர - நயினார் சுவாமியையும் கோமதி அம்மனையும் தரிசித்து வர வேண்டும். ஆஞ்சநேயர் வழிபாடு செய்ய சுசீந்திரம் (தாணுமாலையான்) சென்று வரலாம்.இதுவே , மிகவும் சிறப்பான தெய்வ வழிபாடாகும்.

 

தெய்வ வழிபாடு: 

 ஸ்ரீசக்ரத்தாழ்வார் வழிபாடு சிறந்த வெற்றியையும், செல்வ வளமும் தரும். மதிரை அருகில் திருமோகூர் சென்று வழிபடலாம். ஸ்ரீவில்லிப்த்தூர் ஆண்டாள் கோவிலில் வீற்றிருக்கும்  சக்கரத்தாழ்வாரை   சனி, புதன் கிழமைகள் வழிபட்டு வர வேண்டும்.  வருடம் ஒருமுறை திருமலை சென்று வெங்கடேசப் பெருமாளின் தரிசனம் கண்டு வர வேண்டும். அத்துடன் அரங்கநாதர் (ஸ்ரீரங்கம்)  தரிசனமும் நன்று.

 

தெய்வ வழிபாடு:
உள்ளூர் சிவன் கோயிலில் உள்ள தட்சணாமூர்த்தி சுவாமிக்கு வியாழக்கிழமை தோறும் ஜென்ம நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்து மஞ்சள் ஆடை சார்த்தி 108 கொண்டக்கடலை நிறைந்த மாலையிட்டு மனம் உருக பிரார்த்தனை செய்ய  வேண்டும். குரு ஓரையில் வழிபாடு செய்வது சிற்ப்பு ஆகும். 

 

தெய்வ வழிபாடு:
  குரு வடிவமாக  விளங்கும் திருச்செந்தூர் செந்திலாண்டவன் தரிசனம் சிறப்பு தரும். இறைவன் குரு வடிவமாக அருள்பாலிக்கும் திரு ஆலங்குடி மற்றும் தேனி மாவட்டம் குச்சனூர் வட குருபலவான் தரிசனமும் சிறப்பு தரும். சுவாமிமலை முருகன் தரிசனம் அவசியம் மஹாங்களின் தரிசனமும், ஆசி பெறுதலும் வாழ்வில் உயர்வைத் தரும். இராமேஸ்வரம் இராமநாதசுவாமியை தரிசித்து தீர்த்த நீராடி வரவேண்டும். கும்பகோணம் கும்பேஸ்வரர், திருமயிலை கபாலீஸ்வரர் தரிசனமும் சிறப்பு தரும்.     
 

 

தெய்வ வழிபாடு:

விஷ்ணு வ்ழிபாடு மிகவும் உத்தமம் ஆகும். குலதெய்வ வழிபாடு கண்டிப்பக தேவை,முன்னோர் வழிபாடு தேவை அவசியம்.

 

  

தெய்வ வழிபாடு:
பெருமாள் பத்மாவதி தாயார் வீற்றிருக்கும் திருத்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்து வர வேண்டும். தேனி மாவட்டம் கோம்பை அருகில் உள்ள ரெங்கநாதர்   மிகுந்த அருள்தருவார் மதுரை அழகர் மலையில் வீற்றிருக்கும் பெருமாளை தரிசனம் செய்யலாம். ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் அருள்பாலித்து வரும் காட்டழகரை சனி, புதன் கிழமைகளில் வழிபட்டு வரலாம். 

 

தெய்வ வழிபாடு: 

 திருசெந்தூர் செந்திலாண்டவரை தரிசனம் செய்துவர வேண்டும். காவல் தெய்வங்களுக்கு உரிய முறைப்படி வணங்க வேண்டும். இருக்கன்  குடி மாரியம்மன் வழிபாடு செய்தல் வேண்டும்.