திருமணப் பொருத்தம்

 திருமணப் பொருத்தம்



கனவன்-மனைவி வாழ்க்கையில் பிரச்சனையின்றி ஒருவருக்கொருவர் புரிந்து அன்புடனும், அறமுடனும் வாழ்க்கையின் இறுதிவரை நீண்ட அயுள், நிறைந்த செல்வத்துடனும், சம்மந்த வழியில் பிரச்சனையின்றி அந்யோன்ய உறவுடனும், சுற்றத்தார், அயலார் போற்றும்படி வாழ்வதற்க்காக திருமணப் பொருத்தம் பார்க்கப்படுகிறது.

பொதுவாக 10 வகைப் பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன அவை,

1) தினப் பொருத்தம்

2) கணப் பொருத்தம்

3) மகேந்திரப் பொருத்தம்

4) ஸ்திரி தீர்க்கப் பொருத்தம்

5) யோனிப் பொருத்தம்

6) ராசிப் பொருத்தம்

7) ராசி அதிபதி பொருத்தம்

8) வசியப் பொருத்தம்

9) ரச்சுப் பொருத்தம்

10) வேதைப் பொருத்தம்

மேற்கண்ட 10 பொருத்தங்கள் சரியாக இருந்தாலும், அவரவர் பிறந்த ஜாதகத்தின்படி திசாபலன், புத்திபலன் மற்றும் அந்தரங்க பலன் அகியவற்றையும், நடப்பு கோச்சார பலங்களின் தன்மைகளையும் அறிந்து திருமணப் பொருத்தத்தை உறுதி செய்ய வேண்டும். பெண்ணுக்கும், ஆணுக்கும் ஜாதகம் இல்லாவிட்டல் பெயர், நட்சத்திரதிற்கு பொருத்தம் பார்க்கவும்.



பொருததங்கள் நிர்ணயம்:     

         இப் பத்து பொருத்தங்களிள் தினம், கணம், யோனி, ராசி, ரச்சு ஆகிய இவ்ஐந்தும் முக்கியமானவை. ரச்சு தட்டினால் விவாகம் செய்யக்கூடது, மேற்கண்ட 10 பொருத்தங்களில் 5 பொருத்தங்கள் இருந்தால் சுபம், ஆனால்        5 க்கும்  குறைவான பொருத்தங்கள் இருந்தால் திருமணம் செய்யக்கூடது.


*குறிப்பு:  மிருகசீரிடம், மகம், சுவாதி, அனுசம் -ஆகிய இந்நான்கும் பெண் நட்சத்திரம் அல்லது ஆண் நட்சத்திரமாக இருந்தால் திருமணப் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாம். காந்தர்வம், கர்ப்ப நிச்சிதம், சகுன நிச்சிதம், குரு தெய்வ நியமனம் என்கிற கண்ணிகா தானத்திற்கு எவ்விதப் பொருத்தமும் பாராமலே திருமணம் செய்யலாம்.

No comments:

Post a Comment